இம்மாத இறுதியில் விஜய் நடிக்கும் 'வேலாயுதம்' படத்தின் துவக்க விழாவை நேரு ஸ்டேடியத்தில் நடத்தப் போகிறார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். 'விஜய் மார்க்கெட் இறங்கிருச்சு' என்ற டமார கோஷத்தை அவரது ரசிகர்களின் கைதட்டல்களை கொண்டே அடக்குகிற திட்டம்தான் இந்த பிரமாண்ட துவக்கவிழா. வெளியூர் ரசிகர்களுக்கும் அழைப்பு வைக்கப் போகிறார்களாம். அதனால் சம்பந்தப்பட்ட தினத்தில் சென்னை டிராபிக்குக்கு மறுபடியும் ஒரு கர்பகால வலியும் மூச்சிரைப்பும் நிச்சயம்!
அது போகட்டும்... இந்த விழாவிலும் ஒரு பிரச்சனை. துவக்க விழாவுக்கு வருகை தந்து வாழ்த்துமாறு அழைக்கப்பட்டிருக்கிறார் இந்தி நடிகர் ஷாருக்கான். இலங்கை விவகாரத்தில் தமிழர்கள் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் சில கருத்துக்கள் சிங்களவர்களுக்கு ஆதரவாக இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு அவர் வருவதை விரும்பவில்லையாம் இந்து மக்கள் கட்சி. ஷாருக்கான் வந்தால் கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டிருக்கிறார்கள் இக்கட்சியினர்.
இதை கேள்விப்பட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஷாருக்கானை அழைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலிருக்கிறாராம். பல வருஷம் கழிச்சு புலி வேஷம் போட்டா, வாலுல நெருப்பு வச்சுதாம் விதி!
No comments:
Post a Comment