வேலூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டது காவல்காரன் டீம். சற்றே பிரேக் எடுத்துக் கொண்டாலும், எடுத்தவரைக்கும் எப்படியிருக்கிறது என்பதை பார்க்க ஆர்வம் காட்டினாராம் விஜய். உடனடியாக 'டெலிசினி' செய்து ரைக்டரும் இவரும் பார்த்திருக்கிறார்கள். அது போகட்டும்...
அங்குள்ள கல்லூரி ஒன்றில்தான் பதினைந்து நாட்களாக நடந்தது படப்பிடிப்பு. கல்லூரி காம்பவுண்டிற்குள்ளேயே தங்கியிருந்தார்கள் அசினும் விஜய்யும். (தனித்தனி ரூம்லதாங்க) இந்த தனியார் கல்லூரியின் தாளாளர், விஜய்யின் ஃபேன் என்பதால் நம்ம காட்டேஜையே எடுத்துக் கோங்க என்று விட்டுக் கொடுத்தாராம். இதே வசதியுள்ள இன்னொரு காட்டேஜில் அசின்.
காலையில் டாண் என்று படப்பிடிப்புக்கு வந்துவிடும் விஜய், கன்னாபின்னாவென்று கடுப்பாகிவிடுகிற அளவுக்குதான் அமைந்ததாம் ஒவ்வொரு நாளும். ஆனால் அவரது முகத்தில் அநியாயத்துக்கு சாந்தம். என்னாச்சு? தினமும் ஒரு மணி நேரம் லேட்டாகதான் ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கே வருவாராம் அசின். இவருக்காக ஒரு மணி நேரமாக வெயிட் பண்ணுகிற ஹீரோ முகத்தில் துளியூண்டு எரிச்சல் வரணுமே? ம்ஹ¨ம்!
குளுகுளு குரோட்டன்சுல வென்னீர் ஊத்துற அளவுக்கு விவரமில்லாதவரா விஜய்? அப்புறம்.... பதினைஞ்சு நாளும் இப்படிதான் போச்சு பொழுது!
No comments:
Post a Comment